இந்த வருடத்திளிருந்தாவது  நாம் நம்மிலும் பலகீனமானவர்களிடத்தும் , பெண்களிடத்தும் காட்டும்  வன்முறையை தவிர்ப்ப்போம்.

                  இந்த வருடத்திளிருந்தாவது நாம் முதலீடு எனும் பெயரில் விவசாய  நிலங்களையும் பழங்குடி மக்களின் காடுகளையும்  தனதாக்குவதையோ அல்லது அதற்க்கு முயற்சிக்கும் அரசுக்கோ மனிதர்க்கோ  உடனிருத்தலை தவிர்ப்ப்போம்.

                  இந்த வருடத்திளிருந்தாவது தர்மபுரி கலவரம் மற்றும் பிற சமுக அவலங்களின் உண்மை அரசியலை, நம் அறியாசனையில் இருந்து சற்று கீழிறங்கி  தெரிந்து செயல்பட முயல்வோம்.

                   புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!!!
                  


 OUR MENTOR ARTIST CHANDHRU SIR WHILE , HE IS GUIDING US IN COLLEGE OF FINE ATRS - CHENNAI 

Masanobu Fukuoka- One Straw Revolution





ஒற்றை வைக்கோல் புரட்சி
  
         சில நாட்களுக்கு முன்பு  -மசானபு  ப்புகொகாவின் "ஒற்றை வைக்கோல் புரட்சி "  என்ற புத்தகம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது .அடிப்படையில் இது வேளாண்மை சார்ந்த புத்தகமாக இருந்தாலும் எனக்கு இது , வாழ்வையும் இயற்க்கையையும் புரிந்துகொல்ல தன் ஆயுள் முழுதும் உழைத்த ஒரு தத்துவவாதியின் வார்த்தைகளாகவே படுகின்றது .

        மசானபு  ப்புகொகாவின் துறை இயற்கை வேளாண்மையாக இருக்கிறது .இந்த  புத்தகம் படிக்கும்போது  ஆங்கங்கே எனக்கு என் ஓவியகல்லுரி ஆசிரியர், ஓவியர் திரு.சந்துரு சாரின் வார்த்தைகளும்   மனதில்   வந்து சென்றது .சந்துரு சாரோடு  பேசும்போது   எப்பவுமே எனக்குள் ஒரு ஆச்சர்யமும் சந்தோஷமும் இருந்துகொண்டே இருக்கும்.எப்படி இவரால்  ஒரு விசாயத்தை  இவ்வளவு ஆழமாவும் தெளிவாவும், புரிந்துகொள்ளவும் விளக்கிசொல்லவும் முடிகிறது என்று.

      அதே  உணர்வை இந்த  புத்தகம் மூலம்   மசானபு  ப்புகொகா எனக்கு அளிக்கிறார் . 







இப்புத்தகத்தில் எனக்கு  மிக பிடித்த வரிகள் ,


    " பள்ளிபடிப்பிற்கு உள்ளார்ந்த மதிப்பு எதுவும் கிடையாது . அனால் உலகத்தோடு ஒட்டி வாழ ஒருவன் 'படித்திருக்க ' வேண்டும் என்ற நிபந்தனையை மனித இனம் விதிக்கும் போது ,அது தேவயானதகிவிடுகிறது".


ஒற்றை வைக்கோல் புரட்சி-எதிர் வெளியீடு





          

 

Relationship



This is First animated short film which i Screen write and Directed for IMAGE.I had a great time working with Kandhaswamy and Karthik,Mohan and Vinoth&mani and Prathap and Ismail,Pushparaj.Thanks to image and co-workers.