Eduardo Galeano - on nature and native indian




Eduardo Galeano

எடுவார்டோ  கலியானோ 

 

பூர்வகுடி மக்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியது என்ன?

" நிறைய இருக்கின்றன.முதலாவதாக ,இயற்கையுடனான சங்கமிப்பு என்ற உறுதிப்பாடு. அல்லாத பட்சத்தில், சுட்ட்ருசூழளியலை நாம் பூந்தோட்டம்வைப்பதோடு குழப்பிகொல்ல்வோம்.

நாம் இயற்கையின் ஒரு பகுதி, எனவே இயற்கைக்கு எதிராக இழைக்கப்படும் எந்த ஒரு குற்றமும் மானுடத்திற்கு எதிரான குற்றமே.அரசியல் தலைவர்கள் , தமது இதயத்தில் கை வைத்து , "நாம் தற்கொலை புரிந்துகொண்டிருக்கிறோம்" என்று கூறும்போது, அவர்கள் உலகின் அதிக லாபகரமான தொழில்துறைகள் இழைத்த குற்றங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

எனது இளமைக்காலத்தில், பள்ளத்தாக்குகள் பசுமையாக இருந்தன, பகடிகள் பசுமையாக இருந்தன, இளம்பெண்களை தொடரும் மூத்த ஆண்கள்  பசுமையாக இருந்தார்கள்........................................இப்போது ஒவ்வொரும் பசுமையாயிருக்கிறார்கள், உலக வங்கி பசுமையானது. அனைத்துலக நாணய நிதியம் பசுமையானது. வேதியல் தொழில்துறை பசுமையானது. வாகன உற்பத்தி தொழில்துறை பசுமையானது. ராணுவ தொழில்துறை கூட பசுமையானது. இப்போது ஒவ்வொரும் பசுமையாயிருக்கிறார்கள்.

செவ்வியந்திய (அமெரிக்க பூர்வகுடி) பண்பாட்டிலிருந்து நாம்,ஆழ்ந்த சங்கமிப்பின் உணர்வை கற்றுக்கொள்ளவேண்டும்.இதுவே பதினோராவது கட்டளையாக இருக்கும்: " இயற்கைக்கு  உரியதாயிருக்கும் நீ,அதை நேசிக்க வேண்டும் ".

- எடுவார்டோ  கலியானோ (Eduardo Galeano).

      காலச்சுவடு இதழ் - feb-2013